News

மெட்ரோ பேருந்துகள் வீதியில் இறங்கியதை அடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பீதி – இந்த பேருந்துகள் சட்டவிரோதமான முறையில் இயக்கப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் கஷ்டத்தில் விழுவார்கள் எனவும் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டுகிறார்

மெட்ரோ பேருந்துகள் வீதியில் இறங்கியதை அடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பீதி அடைந்தனர்.


அரசாங்கம் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கீழ் புதிய மெட்ரோ பேருந்துகளை அறிமுகப்படுத்திய நடவடிக்கையை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விமர்சித்துள்ளார்.

இந்த பேருந்துகள் சட்டவிரோதமான முறையில் இயக்கப்படுவதாகவும், இது பொதுமக்கள் மீது மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


இப் பேருந்துகள் அதிக டீசலை நுகர்வதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றின் பொருளாதார நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியதுடன், இந்தத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button