உலக சந்தையில் எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன.. இலங்கையில் விலை மாற்றம் செய்ய முடியாது.. – சிபெட்கோ

இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரகே, இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் விலைகளில் பெரிய அளவில் மாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
“உலக சந்தையில் விலை வீழ்ச்சியடைந்து கொண்டு வந்தது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை உலக சந்தையில் பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டினதும் விலைகள் அதிகரித்தன. எனவே, விலை தொடர்ந்து குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை, மாறாக மீண்டும் அதிகரித்து வருகின்றது.
தற்போதைய நிலையில், டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டினதும் விலைகள் யுத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட விலை வரை இன்னும் குறையவில்லை. எனவே, அவை இன்னும் கூடிய விலையிலேயே உள்ளன.
உலக சந்தை விலைகளைக் கவனிக்கும் போது, தற்போதுள்ள விலையில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனத் தோன்றவில்லை.”
எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரகே, நேற்று (22) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.



