News

டிஜிட்டல் இந்தியாவில் மாட்டுக்கறி சமைத்த மூன்று முஸ்லிம் பெண்கள் கைது !

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி (Kaushambi) மாவட்டத்தில், தங்களது வீட்டில் மாட்டுக்கறி (beef) சமைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஷாமா பர்வீன், ஷைஸ்தா மற்றும் பாத்திமா ஆகிய மூன்று முஸ்லிம் பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், கைப்பற்றப்பட்ட இறைச்சி மாட்டுக்கறி தானா என்பதற்கான தடயவியல் (forensic) சோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.

குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினர் மாட்டுக்கறியை வாங்கி, அதைத் தங்களது வீட்டிற்குள் சமைப்பதாகப் புதன்கிழமை அன்று தங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலின் முதற்கட்ட உண்மைத்தன்மையை உறுதி செய்த பிறகு, துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) அபிஷேக் சிங் தலைமையிலான போலீஸ் குழுவினர் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

Recent Articles

Back to top button