News
நீங்கள் ரணில் விக்கிரமசிங்க அல்லது நாமலுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் அனுரகுமார திசாநாயக்கவுக்கே நன்மை பயக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ; சம்பிக்க
ரணில் விக்கிரமசிங்க அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கத் திட்டமிடும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் SJB ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து அனுராதபுரத்தில் இன்று (16) காலை நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ரணவக்க, விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பது இறுதியில் அனுரகுமார திசாநாயக்கவுக்கே நன்மை பயக்கும் என வலியுறுத்தினார்.
விக்கிரமசிங்கவுக்கு அல்லது ஸ்ரீ.ல.பொ.கவுக்கு வாக்களிக்கக் கருதும் அனைவரையும் பிரேமதாசவின் வெற்றியைப் பெறுவதற்கு அவர் பின்னால் ஒன்றிணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.