News
ரிஷாட் பதியுதீன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்ட கண்டனப்பேரணி

வவுனியா நகரசபை முதல்வரை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தியமைக்கு எதிரான கண்டனப்பேரணி இன்று வவுனியாவில் இடம்பெற்றது.
குறித்த பேரணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் பா. சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து முகம்மது, வினோ மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி, வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பாலேந்திரன், செட்டிக்குளம் பிரதேச சபை தவிசாளர் இம்தியாஸ், உப தவிசாளர்கள், மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
#Vavuniya #RishadBathiudeen #Acmc

