News

76 வருடங்கள் தவறான பாதையில் சென்ற நாட்டை ஒரேடியாக திருப்பிவிட முடியாது ; NPP நாடாளுமன்ற உறுப்பினர்

76 வருடங்களாக தவறான பாதையில் பயணித்த ஒரு நாட்டை ஒரேடியாக 360 பாகை (Degrees) திருப்பிவிட முடியாது என்று தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.

எப்பாவல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

“76 வருடங்களாக தவறான பாதையில் சென்ற நாட்டை எம்மால் ஒரேடியாக 360 பாகை திருப்ப முடியாது. இதற்கு ஒரு செயல்முறையும், வழிமுறையும் உள்ளது. அதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும். அந்த செயல்முறையில் உள்ள சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டித்தான் இந்த அறிவற்ற எதிர்க்கட்சிகள் சில இடங்களில் துள்ளிக் குதிக்கின்றன. நாங்கள் பதற்றமடையவில்லை. இந்த வேலையைச் செய்து முடிப்பதற்காக மக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ளனர். நாங்கள் அதனை நம்பிக்கையுடன் முன்னோக்கி எடுத்துச் செல்வோம்.”

Recent Articles

Back to top button