News

போதைப்பொருள் வியாபாரியின் உடல் பிரத்தியோகமான இடத்தில் அடக்கம்…!!

போதைப்பொருள் வியாபாரியின் சடலம் பிரத்தியோகமான இடத்தில் அடக்கம்…!!

ஜனாஸா தொழுகையும் பள்ளிவாசல்களில் நடத்துவதற்கு இடம் அளிப்பதில்லை எனவும் தீர்மானம்…!!

By: எஸ் ஜே புஹாது

நிந்தவூரில் நேற்று உயிரிழந்த போதைப்பொருள் வியாபாரியின் சடலம் போதைப் பொருள் வியாபாரிகளை அடக்கம் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியோகமான இடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ எல் ரியாஸ் ஆதம் தலைமையில் நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்ற முக்கிய கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மௌலவி எம் ஐ ஜவ்பர், நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்  சட்டத்தரணி ஏ எம் நசீல் மற்றும் நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் அடங்கலான கூட்டத்திலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நபர் அது ஜனாஸாவுக்கான தொழுகை பள்ளிவாசல்களில் நடத்துவதில்லை என்றும் அவரது வீட்டிலேயே தொழுகை நடத்துவது எனவும் நடத்துதல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையானது போதைப்பொருளை நிந்தவூரில் இருந்து முற்றாக ஒழித்து கட்டுவதில் காத்திரமான பங்களிப்பை நல்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button