அமெரிக்காவுடன், ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படத் தவறினால், அந்நாட்டின் மீது நாளை (17 )இரவு கடுமையாக தாக்குவோம் ; ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படத் தவறினால், அந்நாட்டின் மீது நாளை (17 )இரவு கடுமையாக தாக்கப் போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கையை நிறுத்த அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுவரை ஈரானில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 260க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் சுகாதார திணைக்கள செய்தி தொடர்பாளர் உசேன் கெர்மான்பூர் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,ஈரானில் உள்ள பாலங்கள் குண்டுகளை வீசி தகர்க்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து, பென்சில்வேனியா மாகாணத்தில் செய்தியாளர்கள் ஜனாதிபதி ட்ரம்பிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
“ஈரான் எங்களுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறினால், அடுத்த வாரம் ஈரானின் எல்லைப் பகுதிகள், அணு உலைகள் மற்றும் பாலங்களை இலக்காகக் கொண்டு கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும். ஈரானில் ஒருவரும் மீதம் இருக்கமாட்டார்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரு நாடுகளுக்குமிடையே நிலவி வரும் இந்த உச்சகட்ட போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



