நன்றாக மது அருந்திவிட்டு காரை ஒட்டிச் சென்று நள்ளிரவில் வீதியில் சென்ற இரு பெண்களை மோதி தப்பிச்சென்ற காவல்துறை அதிகாரி கைது
இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு இளம் பெண்கள் மீது காரை மோதிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விசேட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.ஹைலெவல் வீதியிலுள்ள மீகொடை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகிலும், வத்தரேக்க பகுதியில் 20ஆவது தூண் அருகிலும் நேற்று (25) இரவு 11.30 மணி முதல் 11.57 மணி வரையான குறுகிய காலப்பகுதியில் இந்த இரு விபத்துகளும் இடம்பெற்றுள்ளன.விபத்துகளுக்குப் பின்னர் காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபரை …
இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு இளம் பெண்கள் மீது காரை மோதிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விசேட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹைலெவல் வீதியிலுள்ள மீகொடை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகிலும், வத்தரேக்க பகுதியில் 20ஆவது தூண் அருகிலும் நேற்று (25) இரவு 11.30 மணி முதல் 11.57 மணி வரையான குறுகிய காலப்பகுதியில் இந்த இரு விபத்துகளும் இடம்பெற்றுள்ளன.
விபத்துகளுக்குப் பின்னர் காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும், மேற்கொள்ளப்பட்ட சுவாச பரிசோதனையில் சந்தேகநபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்



