பொரளை மாகசின் சிறையில் பதற்றமான சூழல்… பாதுகாப்புப் படைகள் இறங்கி நிலமையை கட்டுப்படுத்தும் பணியில்..

பொரளை மாகசின் சிறையில் பதற்றமான சூழல் நிலவுவதாகத் தகவல்.
அனைத்துப் பாதுகாப்புப் படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் ‘E’ வார்டில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்த வார்டை விட்டு வெளியே வந்து வன்முறையில் ஈடுபட்டதையடுத்து இந்த பதற்றம் உருவாகியுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான தகராறே இந்த பதற்றமான சூழ்நிலைக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை, காவல்துறையின் கலகக் தடுப்புப் பிரிவு மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) என்பன உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பதற்றமான சூழ்நிலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்திற்குள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது



