கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழப்பு

பொலனறுவை, பகமூண – தம்புள்ளை வீதியின் தமனயாய பகுதியில் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளதுடன், ஒன்றரை வயதுடைய குழந்தையொன்று காயமடைந்துள்ளது.
இன்று அதிகாலை 1.25 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பகமூண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பகமூண, தமனயாய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரும் 43 வயதுடைய அவரது மகனுமே உயிரிழந்துள்ளதுடன், அவர்களுடன் பயணித்த குழந்தையொன்று காயமடைந்துள்ளது.
காயமடைந்த குழந்தை பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து, பகமுண – தம்புள்ளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதிக்குத் திரும்ப முயன்ற வேளையில் குறித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி பகமூண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



