நாட்டின் பொருளாதார சீரழிவு மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ; அர்ச்சுனா பாராளுமன்றில் தெரிவிப்பு

பாராளுமன்றத்தில் தான் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபை நடவடிக்கைகளின் போது அல்லது தமது பேச்சினால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்திற்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையும் கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான குரலாகத் தாம் பாராளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அத்துடன், நாட்டின் பொருளாதார சீரழிவு மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



