News
தண்ணீர் என நினைத்து இரசாயண திரவத்தை குடித்த 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு – கம்பளை உறவினர்கள் வீட்டுக்கு பெற்றோருடன் சென்ற இடத்தில் சோகம்

வவுனியா, செட்டிகுளத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஒருவர், கம்பளை – டெல்டாவட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து, பசுப்பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் இரசாயனத் திரவத்தை தவறுதலாகக் குடித்ததால் உயிரிழந்துள்ளார்.
தன் பெற்றோருடன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து வந்த உறவினர்கள் அனைவரும் நேற்று பிற்பகல் வீட்டின் முற்றத்தில் திரண்டிருந்த வேளையில், சிறுமி வீட்டிற்குள் சென்று, ஜன்னல் மீது ஏறி அங்கே வைக்கப்பட்டிருந்த இரசாயனத்தை நீர் என நினைத்து குடித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், நஞ்சருந்தியதன் காரணமாக அச்சிறுமி உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



