News

மனைவியை மோட்டார் சைக்கிளில்  வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கதையை முடித்த கணவன் #அனுராதபுரம்

அநுராதபுரம் கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதிக்கு கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தானும் அதே கத்தியால் குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளார்.

இன்று (28) முற்பகல் குறித்த நபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து அவர் மனைவியை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூரிய ஆயுதத் தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த கணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உலுக்குலம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button