News

பொல்கொல்ல ராஜபக்ஷ மண்டபத்திற்கு நாற்காலிகளை கொள்வனவு செய்யும் போது நடைமுறைகள் மீறப்பட்டதாலே ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்-
இதனால் 7,973,114. 50 ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ‘டிசைன் பொய்ன்ட்’ (Design Point) தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான ஹேமந்த லலித் டி சில்வா ஆகியோரை ஊழல் மற்றும் அதற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழு இன்று கைது செய்துள்ளது.


பொல்கொல்ல ராஜபக்ஷ மண்டபத்திற்கு நாற்காலிகளை கொள்வனவு செய்யும் போது, கொள்முதல் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
குறைந்த தொகையைக் குறிப்பிட்ட தகுதியான நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்காமல், ‘டிசைன் பொய்ன்ட்’ நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இந்தத் தீர்மானத்தினால் மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு 7,973,114. 50 ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், வெளித்தரப்பொன்றுக்கு முறையற்ற நன்மையும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் காலை 9.30 மணிக்கு விளக்கமறியலில் எடுக்கப்பட்டதுடன், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button