News

கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டார்.



ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.



இதன்போது, சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button