News

சுகாதாரத்துறையில் பாரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரவுள்ளோம்.. நினைத்த நினைத்த நேரங்களில் வைத்தியசாலைக்கு செல்லும் கலாசாரத்தை நிறுத்துவோம் !

நினைத்த நினைத்த நேரங்களில் வைத்தியசாலைக்கு செல்லும் கலாசாரத்தை நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக கூறினார்.

புலத்சிங்கள கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி இதனை கூறினார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

சுகாதாரத்துறையில் பாரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரவுள்ளோம். நினைத்த நினைத்த நேரங்களில் வைத்தியசாலைக்கு செல்லும் கலாசாரத்திற்க்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு குடும்ப வைத்தியர் நிலையத்தை உருவாக்குவோம்.

குடும்பம் வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் பிரதான வைத்தியசாலைக்கு செல்லமுடியாது.தற்போது சந்தைக்கு வந்தாலும் வைத்தியசாலைக்கு செல்கின்றனர்.சந்திக்கு வந்தாலும் வைத்தியசாலைக்கு செல்கின்றனர்.அப்படி செல்ல முடியாது. பிரதான வைத்தியசாலைக்கு செல்ல குடும்ப வைத்தியரின் பரிந்துரை வேண்டும்.

நாட்டின் சனத்தொகை 22 மில்லியன் ஆனால் வருடத்திற்கு ஓபிடியில் மருத்துவ சேவை பெருபவர்களின் எண்ணிக்கை 80 மில்லியன். ஒருவர் வருடத்திற்கு ஏழு எட்டு தடைவைகள் வைத்தியசாலைக்கு செல்கிறார்.தரமில்லாததும் பரிந்துரை இல்லாததுமே இதற்கு காரணம். எங்கு செல்லவேண்டும் என்று நோயாளியே தீர்மாணிக்கிறார்.

அதற்கு தீர்வாக அடுத்த வருடம் 1000 ஆரோக்யா வைத்திய நிலையங்களை அமைக்க தீர்மானித்துள்ளோம்.கனிஷ்ட வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் வைத்தியசாலைக்கு செல்லமுடியாது.

கொத்தமல்லி குடித்துவிட்டு ஓய்வெடுக்குமாறு கூறினால் மருந்து எடுக்காமல் அதனை செய்யவும்,மருந்து எடுத்தாலும் அனைத்தையும் அருந்துவதில்லைதானே ..மூன்று நாளைக்கு மருந்து எடுத்தால் ஒரு தடவைதான் மருந்து அருந்துகிறோம்.இது ஒரு வீண்விரயம் இதனை நிறுத்த வேண்டும் என கூறினார்.

Recent Articles

Back to top button