News

கற்பிட்டியில் இடம்பெற்ற சோதனையின் போது, சுமார் 200 பாகிஸ்தானியப் புறாக்களுடன் நால்வர் கைது – புறாக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது

கற்பிட்டி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகப் பகுதிக்குச் சமீபமாக மேற்கொள்ளப்பட்ட விசேட காவல் துறை சோதனையின் போது, சுமார் 200 பாகிஸ்தானியப் புறாக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், விசேட காவல் துறை குழுவொன்றினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடல் வழியாக்க சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தப் புறாக்கள், பணப் பந்தயம் வைக்கும் புறாப் பந்தயங்களுக்காகப் பயன்படுத்தத் தயார் செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகு, அதன் எஞ்சின் மற்றும் சிற்றூர்தி ஒன்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாவனெல்லையைச் சேர்ந்தவர் என்றும், ஏனைய மூவரும் கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட புறா ஒன்றின் மதிப்பு சுமார் 50,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அனைத்துப் புறாக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கற்பிட்டி காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button