News
சஜித் பிரேமதாச இந்த ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெறுவார் ; ரவூப் ஹக்கீம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை(21) , முற்பகல் பேராதனை பிரதேசத்தில் உள்ள ஹிந்தகல,சீவலி மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை அளித்தார்.
அதன்பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டு மக்களின்
பேரபிமானத்தைப் பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச இந்த ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெறுவார் என நம்பிக்கை வெளியிட்டார்.