இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு சென்று சந்தித்து கலந்துரையாடினார்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் (Wei Huaxiang), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்து இலங்கை – சீன உறவுகள் குறித்து கலந்துரையாடினார்.
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CPC) ஆகியவற்றிற்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக ராஜபக்ஷ தெரிவித்தார்.
“இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் புதிய தூதுவர் அதிமேதகு வெய் ஹுவாஷியாங்கை எனது இல்லத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என ராஜபக்ஷ தனது சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நிலவிய வலுவான நட்புறவு குறித்து புதிய தூதுவர் தெரிவித்த கருத்துக்களுக்கு அவர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
வெய் ஹுவாஷியாங் சமீபத்தில் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

