News

ஈரானின் நியாமான கோரிக்கைக்கு இலங்கை அரசு காலம் தாழ்த்தாமல் பதில் வழங்குமாறு கோரிக்கை …

இலங்கை கடல் எல்லையிலுள்ள ஈரானியக் கப்பலின் 3 மாலுமிகளை மாற்றும் கோரிக்கைக்கு சம்மதம்

இலங்கை கடல் எல்லையில் உள்ள ஈரானியக் கப்பலின் ஊழியர்கள் மூவருக்குப் பதிலாக வேறு நபர்களை நியமிப்பதற்காக ஈரானிய அரசு விடுத்த கோரிக்கைக்கு இலங்கை சாதகமாக பதிலளிப்பதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்பிட்ட கப்பல் ஊழியர்களை மாற்றும் பணிகள் தூதரக ரீதியாகவும், பாதுகாப்புப் படைகளின் மூலமாகவும் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

இலங்கை கடல் எல்லையில் உள்ள ஈரானியக் கப்பலின் மூன்று மாலுமிகளை மாற்றுவதற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button