News

நாமல் ராஜபக்ஷவின் மனைவி  லிமினி மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க இன்று அதிகாலை துபாய் சென்றனர்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று (09/21) இரவு முதல் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் பிரமுகர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நேற்று மாலை (09/21) முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே  சென்னைக்கு சென்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பேங்கொக்கிற்கும், இத்தே கந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஹொங்கொங்கிற்கும் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர் த நாமல் ராஜபக்ஷவின் மனைவி திருமதி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திரு திலகசிறி வீரசிங்க ஆகியோரும் இன்று (09/22) அதிகாலை 03.30 மணியளவில் டுபாய் சென்றுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button