விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘லொக்கு பெட்டி’யின் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் கையகப்படுத்தப்படுகிறது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வாவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கைப்பற்ற சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கைப்பற்றப்படவுள்ள சொத்துக்களில் 15 பேர்ச் காணியும் அதில் அமைந்துள்ள வீடும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு குறித்த சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மத்துகம, கெப்பெட்டியகஹலந்த பகுதியில் இந்தக் காணியும் வீடும் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



