News
கண்டி போகம்பர அருகில் நடைபாதையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில், நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

கண்டியில் உள்ள பழைய சிறைச்சாலைக்கு முன்பாக இருந்த நடைபாதையின் ஒரு பகுதி இன்று (29) காலை இடிந்து விழுந்ததில், நான்கு பேர் காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் போது, அந்த நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள கடை ஒன்றின் முன்பாக இருந்த நடைபாதையின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கி இடிந்து விழுந்துள்ளது.
கடைகளுக்குப் பின்னால் ஓடும் கால்வாயில் பாயும் நீரினால் நடைபாதைக்கடியில் உள்ள மண் அரிப்புக்குள்ளானதே இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



