News

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய கைதிகளைப் பொறுத்தமட்டிலே, இவரை கொலை செய்தால் மார்க்க ரீதியாக தங்களுக்கு நன்மை தரும் என்ற நம்பிக்கையிலே அப்படி செய்வதாக ஒரு கருத்து பரவுது.

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.



பாராளுமன்றத்தில் இன்று (07) நிலையியல் கட்டளை 27(2) கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றிய அவர், அனோஜன் சிறையில் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.



அனோஜன் கத்தியால் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிப்பதாகவும், எனினும் நகக் கீறல்களால் ஏற்பட்ட காயங்களே காணப்பட்டதாக சவூதி சிறைச்சாலை தரப்பு தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டதாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய கைதிகளைப் பொறுத்தமட்டிலே, இவரை கொலை செய்தால் மார்க்க ரீதியாக தங்களுக்கு நன்மை தரும் என்ற நம்பிக்கையிலே அப்படி செய்வதாக ஒரு கருத்து பரவுது.

அத்துடன், அனோஜனின் மேன்முறையீடு, சவூதி தரப்பின் மேல்முறையீடு, சட்டப் பிரதிநிதிகள் குழுவின் சவூதி விஜயம், ஜனாதிபதியின் அரச மன்னிப்பு கோரிக்கை மற்றும் அனோஜனை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெளிவான தகவல்களை வழங்குமாறும் அவர் கோரினார்.



அனோஜன் தொடர்பான விடயத்தில் எவரும் அரசியல் நோக்கத்துடன் செயற்படவில்லை எனத் தெரிவித்த சாணக்கியன் இராசமாணிக்கம், அவரை எவ்வழியிலாவது பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button