நான் ஆதரவு வழங்குபவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள் என்று சொல்பவர்களை அங்கொடை அனுப்ப வேண்டும் ; திஸ்ஸ அத்தநாயக்க
ஐ.தே.க கூட்டமைப்பு ஒன்றை ஆரம்பித்து கட்சிகளை இணைப்பது தொடர்பில் எம்மிடமும் தெரிவித்தனர்.. ஆனால் எமக்கு இந்த கூட்டணி தொடர்பில் உடன்பாடு இல்லை .. நாம் எனது கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களையும் சேர்த்து கட்சியை வலுவாக்கவே முயற்சி எடுக்கிறோமே தவிர கூட்டணி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என சமகி ஜன பலவேகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில் சமூகவலைகள் மற்றும் பல இடங்களில் தற்போது பேசுபொருளாக உள்ள, நீங்கள் (திஸ்ஸ அத்தநாயக்க) ஆதரவு கொடுக்கும் அணி தோல்வியை சந்திக்கும் என்ற விடயம் தொடர்பில் என்ன சொல்கிறீர்கள் என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, … “அது வழமையாக பேசப்பட்டு வரும் விடயம் என்றாலும் தொடர்ந்து வெற்றியை சந்தித்தவர் யார் ..? அப்படி என்றால் அனுரகுமார குழுவினர் 60 வருடங்கள் தோற்றவர்களே .. அப்படி கதைப்பவர்கள் யார்னு என்னிடம் சொல்லுங்க . தேர்தலில் தோற்கவும் முடியும் , வெல்லவும் முடியும் , வாழ்நாள் முழுதும் வெற்றியை மட்டும் சந்தித்தவர்கள் எவரும் இல்லை … தோல்வியை மட்டும் சந்தித்தவர்களும் எவரும் இல்லை.. இது போன்ற கேள்விகளை கேட்பவர்களை அங்கொடை அனுப்ப வேண்டும் . ஏனென்றால் அவர்கள் இல்லை இங்கு அரசியல் செய்வது என மேலும் தெரிவித்தார்.