பௌத்த சாசனத்தின் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கும் பகையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஞானசார தேரர் பலிக்கடாவாக்கப் பட்டுள்ளார் – போர்த்துக்கேயர்கள் பௌத்த சாசனத்திற்கு ஏற்படுத்திய அழிவை விட இது பெரியது ; உலப்பனே சுமங்கல தேரர்

போர்த்துக்கேயர்களால் பௌத்த சாசனத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அழிவைவிடப் பாரிய அழிவை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக உலப்பனே சுமங்கல தேரர் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தாங்கள் ஆரம்பத்திலிருந்தே உணர்ந்திருந்ததாகவும், இறுதியில் மத நம்பிக்கையற்ற இந்த அரசாங்கம் பௌத்த பிக்குகளின் காவி உடையைக் களையும் நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நேற்று வெள்ளிக்கிழமை (16) ‘காவி உடைக்கு நீதி’ என்ற தொனிப்பொருளிலான எதிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்து உரையாற்றியபோதே உலப்பனே சுமங்கல தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு, அதிகாரிகளால் ஏற்பட்ட தொழில்நுட்பத் தவறொன்றை அடிப்படையாகக் கொண்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய சுமங்கல தேரர், ஏற்கெனவே அனுபவித்து முடித்திருக்க வேண்டிய தண்டனையை மீண்டும் அனுபவிக்கச் செய்வது பாரிய அநீதியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளால் இழைக்கப்பட்ட தவறுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே தவிர ஞானசார தேரர் அல்லர் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பௌத்த சாசனத்தின் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கும் பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக ஞானசார தேரர் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளதாகவும் சுமங்கல தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோட்டபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர் தலைமையிலான 39 பௌத்த பிக்குகளின் அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் ஏற்றுக்கொள்ளாமல், அவர்களுக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர்த்துக்கேய ஆட்சியாளர்கள் வாரியபொல சுமங்கல தேரருக்கு ஏற்படுத்திய அவமதிப்புக்குப் பின்னர், பௌத்த பிக்குகளுக்கு இவ்வாறான அவமானத்தை ஏற்படுத்தியிருப்பது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பௌத்த சாசனத்திற்கு அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகத் தாம் கருதும் அவமதிப்பு நிவர்த்தி செய்யப்படும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்த சுமங்கல தேரர், விரைவில் பெலவத்தைக்கும் வரவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பௌத்த சாசனத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே உணர்ந்திருந்தோம். இன்று அந்த ஆபத்து உண்மையாகியுள்ளது.
மத நம்பிக்கையற்ற இந்த அரசாங்கம் பௌத்த பிக்குகளின் காவி உடையையே களையும் நிலைக்குச் சென்றுள்ளது.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு, அதிகாரிகளின் தொழில்நுட்பத் தவறைக் காரணமாகக் காட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் செய்த தவறுக்காக ஞானசார தேரர் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?
பௌத்த சாசனத்தின் மீதான பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக ஞானசார தேரரை இந்த அரசாங்கம் பலிக்கடாவாக்கியுள்ளது.
மகா சங்கத்தினரின் அறிவுரைகளுக்குச் செவிசாய்க்காமல் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவையும் பெற்றுள்ளது.
பௌத்த சாசனத்திற்கும் காவி உடைக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமதிப்புக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது. விரைவில் நாங்கள் பெலவத்தைக்கும் வருவோம்” என உலப்பனே சுமங்கல தேரர் மேலும் தெரிவித்தார்.