ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக தேசிய சதனையாளரான பாத்திமா ஷாபியா யாமிக் சேர்க்கப்படாதது ஏன் ? மஸ்தான் MP கேள்வி

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் இன்று (23) நிலையியற் கட்டளை 27/2 இன் எழுப்பிய கேள்வி.
நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் கேற்கப்படும் கேள்வி கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
2026 ஆம் ஆண்டு ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரில் நடைபெறவுள்ள 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 156 பேர் கொண்ட விளையாட்டு வீரர்கள் அணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 100 ஆண் விளையாட்டு வீரர்களும் 56 பெண் விளையாட்டு வீரர்களும் அடங்குவதுடன், அவர்கள் 25 விளையாட்டுப் பிரிவுகளில் போட்டியிடவுள்ளனர். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக வளர்ந்து வரும் தேசிய சதனையாளரான பாத்திமா ஷாபியா யாமிக் இக்குழுவில் சேர்க்கப்படவில்லை.
கண்டி விஹார மஹா தேவி பாலிகா வித்யாலயாவின் பழைய மாணவியும், இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீராங்கனையுமான ஷாபியா யாமிக், சுவட்டு மைதானப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக, 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 × 100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் கோட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அதாவது,
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.53 வினாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய சாதனையையும் படைத்துள்ளார்;
200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.58 வினாடிகளில் இந்திய வீராங்கனை P.T ஊஷா . அவர்களின் 32 வருட சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்; மேலும்
4 × 100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் 44.70 வினாடிகளில் இலக்கைக் கடந்து
இலங்கை தங்கப் பதக்கம் வெல்ல பங்களிப்புச் செய்துள்ளார்;
அமைச்சர் பின்வருவனவற்றுக்குப் பதிலளிப்பாரா:
(அ) 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (ஐச்சி-நகோயா 2026) இலங்கையை செய்வதற்காகக் பிரதிநிதித்துவப்படுத்த தெரிவு வீரர்களைத் விளையாட்டு கையாளப்பட்ட தெரிவு அளவுகோல்கள் மற்றும் நடைமுறைகள் யாவை? அத்துடன் சம்பந்தப்பட்ட தேசிய விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி ஆகியவற்றால் பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் எவை?
(ஆ) ஷாபியா யாமிக் அவர்களை குறித்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கைக் குழுவில் சேர்ப்பதற்காக உத்தியோகபூர்வமாகப் பரிசீலிக்கப்பட்டாரா? அவ்வாறாயின் அவரது தெரிவு அல்லது தெரிவு செய்யப்படாமை எதைக் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது?
(இ) அவர் பரிசீலிக்கப்படவில்லையெனில் அல்லது தெரிவு செய்யப்படவில்லையெனில், 2025 தெற்காசிய போட்டிகளில் அவரது சிறப்பான திறமையும் மற்றும் அதன் பின்னரான தேசிய மட்டத்திலான திறமைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டதா என்பது உட்பட, அவ்வாறான புறக்கணிப்புக்கான காரணங்கள் யாவை?
(ஈ) ஷாபியா யாமிக் மூன்று முறை கடிதம் எழுதியும், நிர்வாகம் ஏன் உரிய நேரத்தில் அவருக்குப் பதிலளிக்கத் தவறியது?
(உ) பிரதான சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்யும் செயற்பாடானது, தெளிவான மற்றும் பொதுமக்களுக்கு வெளிப்படையான தெரிவு அளவுகோல்களுடன், ஒளிவுமறைவற்ற, பக்கச்சார்பற்ற மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
(ஊ) இன்றேல், ஏன்?



