வங்காள விரிகுடாவில் தாழ்வு அழுத்தம் ஆழ்ந்த தாழ்வு அழுத்தமாக வலுப்பெற்றுள்ளது: கடுமையான புயலாக மாறும் சாத்தியம் – 7 மாகாணங்களுக்கு பலத்த மழை மற்றும் சில பகுதிகளில் 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று
வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகி வரும் தாழ்வு அழுத்தம் காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையின் நிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வவங்காள விரிகுடாவின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கடற்பகுதியில் நிலவிய தாழ்வு அழுத்தம் தற்போது ஆழ்ந்த தாழ்வு அழுத்தமாக வலுப்பெற்றுள்ளதுடன், இது வட அட்சரேகை 15.3 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 89.7 இற்கு அருகில் மையங்கொண்டுள்ளது.
இன்று (26) இத்தொகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்பதுடன், நாளைக்குள் இது வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் கடுமையான புயலாக வலுப்பெறக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இத்தொகுதியின் நேரடி தாக்கம் இலங்கைக்கு இல்லாவிட்டாலும், இதன் காரணமாக உள்வரும் காற்றுப் பிரவாகம் நாடு ஊடாகக் காணப்படும் என்பதால் இந்த மழைக்கால காலநிலை ஏற்படலாம். அதற்கமைய, வடக்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் விட்டுவிட்டு மழையுடனான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் இடதுமிழியாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



