News
பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை பொலிஸாரால் சுற்றிவளைப்பு – 5540 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன

எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலந்தாஹெல பகுதியில் எதிமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர் எவரும் இல்லாத நிலையில் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா காணி சுற்றிவளைக்கப்பட்டு 5540 கஞ்சா செடிகள் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
எதிமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



