பேருந்தில் ஏறுவதற்கு நடத்துனர் அனுமதி மறுத்ததால் சாரதி மற்றும் நடத்துனர் மீது கொ**டூரமான தா** க்குதலை நடத்திய 6 பேர்

களுத்துறையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர், சொகுசு பேருந்து ஒன்றை வழிமறித்து அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கொழும்பிலிருந்து களுத்துறைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து, பயணிகளை இறக்கிவிட்டு நிறுத்துமிடத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டபோது நேற்று (27) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர், பேருந்தின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவியில் பதிவாகியுள்ளது.
கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்தபோது, மொறட்டுவைப் பகுதியில் ஒருவர் பேருந்தில் ஏறுவதற்கு நடத்துனர் அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை ஓரளவு கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்



