இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்கத்தைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மாலைத்தீவு சிறையில் தண்டனை அனுபவித்து வந்த இலங்கையர் முகம்மத் சுலைமான் குற்றமற்றவர் என நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்கத்தைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, மாலத்தீவில் ஒரு வருடச் சிறைத் தண்டனையை ஏற்கனவே பூர்த்தி செய்த இலங்கையர் ஒருவர் மாலத்தீவு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாலத்தீவு ஊடகங்களின்படி, கடந்த 2 க்கும் மேற்பட்ட கிலோ தங்கம் தொடர்பான வழக்கில், கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் திகதி கிரிமினல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு வருடச் சிறைத் தண்டனை தீர்ப்பு, சரியாக ஒரு வருடம் கழித்து 2026 அக்டோபர் 28 அன்று உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்றது.
துபாய் ஊடாக எமிரேட்ஸ் விமானத்தில் மாலத்தீவு வெலானா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த குறித்த இலங்கையர் முகம்மத் சுலைமான் , Green signal ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது அவரது ஜீன்ஸ் சட்டைப் பைகளிலும் உள்ளாடைகளுக்கும்ள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,282 கிராம் (Gold Paste) சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாலத்தீவு சுங்கச் சட்டத்தின் 97(ஏ) பிரிவின் கீழ் பொருட்கள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவருக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், கடத்தல் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தேவையான சட்ட விதிகளை இந்த வழக்கு பூர்த்தி செய்யவில்லை என்று உயர் நீதிமன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.
அந்தத் தங்கம் தடை செய்யப்பட்ட பொருளும் அல்ல, சுங்க வரி விதிக்கப்பட வேண்டிய பொருளும் அல்ல என்பதை அரச தரப்பு ஒப்புக்கொண்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அறிவிக்கப்படாத தங்கத்தை அனுமதியற்ற பொருளாகக் கருதலாம் என்ற அரச தரப்பின் வாதத்தை நிராகரித்த உயர் நீதிமன்றம், ஒரு செயல் சட்டத்தின் கீழ் குற்றமாக வெளிப்படையாக வரையறுக்கப்பட்டால் ஒழிய அதைக் குற்றமாகக் கருத முடியாது என்று தீர்ப்பளித்தது.
கிரிமினல் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்றும் நீதிமன்றம் கண்டறிந்து, அதற்கமைய அந்தத் தீர்ப்பை ரத்து செய்தது.
இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் முகமது ஷனீஸ், ஹுசைன் மஜீத் மற்றும் ஹுதைபா முகமது ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.
கீழ் நீதிமன்றம் விதித்த முழுச் சிறைத் தண்டனையையும் அந்த இலங்கையர் ஏற்கனவே அனுபவித்து முடித்த பின்னரே இந்த விடுதலை கிடைத்துள்ளது.



