News

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர் வெளியிட்ட சந்தோஷமான செய்தி

எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்கு பாரிய நிவாரணங்கள் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு போர் நிறைவடைந்து நாட்டை கட்டியிருப்பக் கூடிய சூழ்நிலை உருவாகும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.



இலங்கையில் போர் மத்திய கிழக்கு போருக்கு முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை விட தற்பொழுது 80 வீத விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சுத்திகரிக்கப்படாத எரிபொருட்களின் விலை போருக்கு பின்னர் 56 விதத்தினாலு உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார்.

உண்மையில் எரிபொருள் விலை உலக சந்தையின் பிரகாரம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அரசாங்கம் நிவாரணங்களை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை குறைத்து மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தில் பாரியளவு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணர்ச்சி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button