மிகப் பெரிய சர்வதேச பயங்கரவாதி டொனால்ட் டிரம்ப் 🔹அவரது முகத்திற்கு பலத்த அறை 🔹
பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சாடல்

மிகப் பெரிய சர்வதேச பயங்கரவாதி டொனால்ட் டிரம்ப்
அவரது முகத்திற்கு பலத்த அறை
பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சாடல்
“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதியான டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதியன்று ஒரு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்;இப்போது, டிரம்பின் முகத்தில் அறைந்தாற்போல, பல குடியேற்றவாசிகள்,அங்கு பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் ஆளுநர்களாகவும்
செனட்டர்களாகவும் மாறியுள்ளனர்”.இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
வியாழக்கிழமை (5)
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் – அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் (Trusts Amendment Bill) தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில்,மேலும் கூறியவையாவன:
பயங்கரவாத நிதியூட்டல் பற்றி நாம் பேசும்போது, உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதியான டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதியன்று ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்; அது நம் அனைவருக்கும் ஒரு பெரிய நிவாரணமாகும். உலகம் முழுவதும் குழப்பத்தை (anarchy) கொண்டுவருவதில் அவர் ஈடுபட்டுள்ள பயங்கரவாதத்தால் நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம்.
எனவே, தற்போது அங்கு செனட் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு அவைகளின் நிலைப்பாடுகளும் மாறியுள்ளன.
மிகவும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், அவரது ஆதரவுத் தளமான ‘MAGA’ ஆனது இரண்டு முக்கியமான கூறுகளை நம்பியிருந்தது. ஒன்று, அவர் “எந்தப் போருக்கும் செல்ல மாட்டேன்” என்று வாக்குறுதி வழங்கினார், ஆனால் அவர் அந்த வாக்குறுதியை மீறிவிட்டார்.
அடுத்தது, அவர் நாட்டில் குடியேற்றவாசிகளைத் தடுத்து நிறுத்த முயன்றார்.
இப்போது, டிரம்பின் முகத்தில் அறைந்தாற்போல, பல குடியேற்றவாசிகள், பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் ஆளுநர்களாகவும் செனட்டர்களாகவும் மாறியுள்ளனர். அமெரிக்க மக்கள் டிரம்பிற்கு இவ்வாறாக கண்டனம் தெரிவித்துள்ளனர்; நாம் அனைவரும் இதைக் கொண்டாடுவோம்.
குறைந்தபட்சம் இனிமேலாவது அவர் எந்த யுத்தத்தையும் நிறுத்துவார் என்றும், லெபனான் மற்றும் பாலஸ்தீனத்துடனான போரை நிறுத்துமாறு தனது கூட்டாளியான நெதன்யாகுவையும் அவர் சமாதானப்படுத்துவார் என்றும், இறுதியில் முழு உலகிற்கும் அழிவைக் கொண்டுவருவதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வார்கள் என்றும் நாங்கள் நினைக்கிறோம்.
எனவே, இதைக் கூறிக்கொண்டு, இந்த மகத்தான சாதனைக் கொண்டாட்டத்தின் மத்தியில், குறிப்பாக அவர் மீது இந்த மோசமான பலத்த அடியைக் கொடுத்ததற்காக அமெரிக்க பொதுமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-விருட்ச வேந்தன்



