News

அனுராதபுரத்தில் பெளத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பிக்க முயன்ற நிலையில் பொலிஸார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதால் பதற்ற நிலை

அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மையுடன் தொடர்புடையதாக இரு பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ.வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.



அனுராதபுரம் புனித நகரத் திட்டத்திற்கு எதிராக இன்று (07) இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.



எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளையும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பொதுமக்களையும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்ற முயன்றபோது அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.



பின்னர் இந்த அமைதியின்மை மோதல் நிலைமை வரை தீவிரமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button