News

நான் உயிரிழந்த பிறகு நிச்சயம் சொர்க்கத்திற்குத்தான் செல்வேன் – சொர்க்கத்தில் நுழைவதற்காக எனது  எதிரிகளை மன்னிக்கவும் மாட்டேன் ; ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (CBS) நாளிதழின் ’60 மினிட்ஸ்’ நிகழ்ச்சிக்காக அளித்த நேர்காணல்  சுவாரஸ்யமான ஒன்றாக மாறியது.

தனது இரண்டாவது பதவிக் காலத்தில் பல கொலை முயற்சிகளில் இருந்து தப்பிய குடியரசுக்கட்சித் தலைவரான டிரம்பிடம், நிருபர் ரோஸ் டவுதாட் மரணம் மற்றும் வாழ்க்கை பற்றிய கேள்விகளை எழுப்பினார்.


.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நேர்காணலின் போது, 80 வயதான டிரம்பிடம், இந்த கொலை முயற்சிகளில் இருந்து தப்பியது தனது சொந்த மரணத்தைப் பற்றிய பார்வையை மாற்றியிருக்கிறதா என்று டவுதாட் கேட்டார். தொடர்ந்து, “நீங்கள் இறந்த பிறகு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்ற நேரடி கேள்வியையும் முன்வைத்தார்.
.
சற்று யோசித்த அதிபர், “சரி, நான் மறைந்த பிறகு என்னை அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
.
“நான் ஒரு ஆன்மீகவாதி, எனவே தத்துவார்த்த ரீதியாக நான் சொர்க்கத்திற்குத்தான் செல்வேன் என்று நம்புகிறேன். நரகத்திற்கு செல்ல நான் விரும்பவில்லை” என்றும் அவர் கூறினார்.
.
இதையடுத்து, சொர்க்கத்தில் நுழைவதற்காக தனது அரசியல் எதிரிகளை மன்னிக்க முடியுமா என்று டவுதாட் டிரம்பிடம் கேட்டார்.
.
“நீங்கள் இறந்து அடுத்த வாழ்க்கைக்குள் நுழைகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சொர்க்கத்திற்குள் நுழைவதற்கு, ஜேம்ஸ் கோமி, நான்சி பெலோசி அல்லது பல ஆண்டுகளாக நீங்கள் வெறுப்பை வெளிப்படுத்திய அனைவர் மீதும் அன்பையும் மன்னிப்பையும் செலுத்தினால் மட்டும் போதும் என்ற நிலை வந்தால், உங்களால் அதை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.
.
அதற்கு பதிலளித்த டிரம்ப், “உண்மையாகச் சொன்னால், நிச்சயமாக முடியாது” என்றார்.
.
“என்னால் நிச்சயமாக அதை செய்ய முடியாது. ஏனெனில் எனது சில எதிரிகளை நான் உண்மையாகவே வெறுக்கிறேன், அது எப்போதும் அப்படியேதான் இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button