News

“சோறு சாப்பிடுவதை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்கவும்” – விவசாய அமைச்சர் அரச ஊழியர்களுக்குக் கோரிக்கை

தற்போது உட்கொள்ளும் சோற்றில் மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்குமாறு தான் அரச ஊழியர்களுக்குப் பரிந்துரைப்பதாக விவசாய, கால்நடை வளங்கள், நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

இன்று (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் மேலதிகமாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் லால் காந்த,

“அரச ஊழியர்களுக்கு நான் செய்யும் பரிந்துரை என்னவென்றால், தற்போது சாப்பிடும் சோற்றில் மூன்றில் இரண்டு பங்காகக் குறையுங்கள். இதற்காக இப்போது என்னை விமர்சிப்பார்கள்… அரச ஊழியர்களில் பெரும்பாலோர் உட்கார்ந்து கொண்டுதான் வேலை செய்கிறார்கள்” என்றார்.

Recent Articles

Back to top button