News

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு 🔹

வாழ்க்கைச் செலவுப் கொடுப்பனவு மற்றும் மேலுமொரு சம்பள அதிகரிப்பை வழங்குமாறு ஆசிரியர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது.



அரச உத்தியோகத்தர்களில் ஏற்கனவே அதிக சம்பளம் பெறும் முதல் 10 பிரிவினருக்குள் ஆசிரியர்களும் உள்ளடங்குவதைச் சுட்டிக்காட்டி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.



இன்று (23) நாடளாவிய ரீதியில் ஆசிரியர் போராட்டங்கள் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில்இ கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன குறிப்பிடுகையில்,



அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக அரசாங்கம் 110 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும்இ கடந்த சில வருடங்களில் ஆசிரியர்களின் சம்பளம் 60 தொடக்கம் 80 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.



இந்தச் சந்தர்ப்பத்தில் மேலும் சம்பள அதிகரிப்பையோ அல்லது புதிய கொடுப்பனவுகளையோ கோருவது நியாயமற்றது.



ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இடையே நிலவும் சம்பள முரண்பாட்டை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.



அது சம்பள மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் ஊடாகத் தீர்க்கப்படவுள்ளது. அரசாங்கம் சம்பள அதிகரிப்புக்காக மாத்திரம் 110 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.



ஆசிரியர்கள் ஏற்கனவே அரச சேவையில் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழிற்றுறைப் பிரிவினருக்குள் உள்ளடங்குகின்றனர்.



மறுபுறம்இ அவர்கள் கோரும் மேலதிக வாழ்க்கைச் செலவுப் கொடுப்பனவு என்பது இதற்கு முன்னர் எப்போதும் நடைமுறையில் இருந்த ஒன்றல்ல என குறிப்பிட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button