News

‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்று.. பொருட்களின் விலையைக் குறை..’எனக் கூறி அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் …

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த அரச ஊழியர்கள் குழுவொன்று, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, ஹட்டன் நகரில் அமைந்துள்ள நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன்பாக (23) ஆம் திகதி மதிய உணவு இடைவேளையின் போது அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்தப் போராட்டத்தில் ஹட்டன் கல்வி வலய அலுவலக ஊழியர்கள் மற்றும் நோர்வூட் பிரதேச செயலக ஊழியர்கள் குழுவொன்று இணைந்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் தாம் பெறும் சம்பளம் போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தனர்.

அதன்படி, தமது சம்பளத்தை அதிகரித்து வழங்கவோ அல்லது வாழ்க்கைச் செலவைக் குறைத்து வழங்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ

Recent Articles

Back to top button