பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கவலை

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள் முறையாகப் பின்பற்றப்படாத சந்தர்ப்பங்கள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.
.
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தின் போதே இவ்விடயங்கள் ஆராயப்பட்டன.
.
ஆசிரியர் இடமாற்றங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் முன்பள்ளி கல்வியைக் கண்காணிப்பதில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட கல்வித் துறையைப் பாதிக்கும் ஏனைய பல பிரச்சினைகள் குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.
.
இக்கூட்டத்தில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தரப்பினரும் கலந்துகொண்டனர்.



