News

பணக்காரர்களின் வருமானம் மேலும் 6.8% அதிகரிப்பு… 19% ஏழைகள் மேலும் ஏழையாகியுள்ளனர்..

நாட்டின் அதிபணக்கார 20 சதவீத மக்கள் பிரிவினரின் வருமானம் 6.8 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், அதிஏழை 20 சதவீத மக்களின் வருமானம் 19.6 சதவீதம் குறைந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் () அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு அரசாங்கமும் பராமரிக்க வேண்டிய மக்கள் பிரிவினருக்காகப் பணம் செலவிட்டுள்ள போதிலும், ஜனாதிபதி அநுர திசாநாயக்க முன்வைத்துள்ள “சரடியெல் பாணியிலான தலைகீழான வரவு-செலவுத் திட்டம்” (தலைகீழாக மாறிய வரவு-செலவுத் திட்டம்) ஒன்றையே சமர்ப்பித்துள்ளார் என்றார்.

“சரடியெலின் கொள்கை பணக்காரர்களிடம் இருந்து எடுத்து ஏழைகளுக்குக் கொடுப்பதாகும். ஆனால் ஜனாதிபதியின் கொள்கை இந்த நாட்டின் ஏழைகளிடம் இருந்து மேலும் மேலும் எடுத்து, நெருங்கிய நண்பர்களான வியாபார வர்க்கத்தை மேலும் பணக்காரர்களாக்குவதாகும்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

கடந்த இரண்டு வருடங்களின் வரவு-செலவுத் திட்டங்களும் அதே அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி ஏழைகளை மிக மோசமான ஏழைகளாக மாற்றி, நெருங்கிய வியாபாரக் கும்பலைத் தீவிர பணக்காரர்களாக மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்நாட்டின் வறுமை விகிதம் 14.3 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகப் படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் சுரங்க ரத்நாயக்க அங்கு மேலும் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button