சிவப்பாய் போன அக்குறணை !!!

சிவப்பாய் போன அக்குறணை !!!
By : Safwan shaheed
பல தசாப்தங்களாய் இலங்கைத்தாய்க்கு வெளிநாட்டு அமைச்சர்,உயர் கல்வி அமைச்சர், என பல அதி உயர் பதவிகளை
பச்சை அணி மூலம் வழங்கிய அக்குறணை இம்முறை தம்மீது சிவப்பு சாயம் பூசிக்கொண்டதேன் ?
(இப்போதெல்லாம் அமைச்சுப்பொறுப்பை விட்டு சும்மா ஒரு எம்பி கிடைத்தாலே பெரிய விடயம்)
வெட்டினாலும் பச்சை இரத்தம் என ஐதேகவின் கோட்டையாக இருந்த இடம் எப்படி மாறிப்போனது ?
வாக்குகளை எண்ணுமிடத்தில் அக்குறணை வாக்குப்பெட்டிகளை திறந்து எடுக்க எடுக்க NPP யே திரும்ப திரும்ப வந்ததாக கூறுகிறார் நேரில் பார்த்த ஒருவர்.
இம்மாற்றத்துக்கு அக்குறணையின் NPP யின் சகோதரர் ரியாஸ் தலைமையிலான அயராத உழைப்பு மிக முக்கிய காரணமாக இருந்த போதிலும் இன்னும் பல காரணங்களும் இல்லாமல் இல்லை.
ஊரிலேயே இருந்தும் இல்லாமல் இருக்கும் எம்பியாலும் அவரோடு தேர்தல் காலத்தில் மட்டும் வந்து வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு செல்லும் எம்.பியாலும் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டருப்பதும், எதிர்க்கட்சியில் பலமான ஒரு அணி இல்லாமல் போனதும், மாற்றத்துக்காக வந்த பி.எம்.ஜே.டி திக்கும்தெரியாமல் திசை மாறிப்போனதும், (திசைகாட்டியை நாடி இருக்கலாம்) ஏ.சி.எஸ் ஹமீடை தாண்டிய தலைமுறைகள் வாக்குரிமை பெற்றிருப்பதுமே அக்காரணங்களில் சிலவாகும்.
இந்த மாற்றம் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை பெற போதுமானதா ?
ஹலீமும் ஹக்கீமும் பொதுத்தேர்தலில் ஒன்றாக வரத்தான் போகிறார்கள் அவர்களை தாண்டி என்ன நடக்கப்போகிறது ..?
சிவப்பாய் போன அக்குறணை சிவப்பாகவே இருக்குமா அல்லது தாம் ஹூ வைத்தவரையே கொண்டு வந்து வெற்றி பெற வைக்கப்போகிறார்களா ?
காலம் பதில் சொல்லும் !!!
“ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை போராளிகளே புறப்படுங்கள் “

