News
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர், பதவியை ராஜினாமா செய்தார்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவர் பதவியில் இருந்து சாலிய விக்ரமசூரிய இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளார்.
எரிசக்தி துறை நிபுணரான விக்கிரமசூரிய இதற்கு முன்னர் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகவும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்