News
ஏற்கனவே பல மோசடிகளை செய்து மக்களை ஏமாற்றி வந்த இருவர், ஒரு கோடியே முப்பது இலட்சத்துக்கு கார் ஒன்றை விற்கசென்ற போது சிக்கினர்.
கிரிபத்கொட பிரதேசத்தில் போலி ஆவணங்களை தயாரித்து ஒரு கோடியே முப்பது இலட்சத்துக்கு காரை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கந்தானை மற்றும் பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 37 மற்றும் 39 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் போலி ஆவணங்களை தயாரித்து பன்னல பிரதேசத்துக்கு விற்பனை செய்த கார் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் வீடு கட்டுதல், வீடு வாங்குதல், விற்பனை செய்தல் போன்றவற்றை மேற்கொண்டு மக்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.