News
டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி சம்பவம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சி

அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சி வெளியிட்டுள்ளதுடன், அவர் பாதுகாப்பாக உள்ளார் என்பதை அறிந்து நிம்மதியடைந்துள்ளார். அரசியலில் இலங்கையர்கள் இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

