News
இளைஞர்களை தேடும் நாமல் – 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே பொதுஜன பெரமுனவில் போட்டியிட வாய்ப்பு

இம்முறை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது இளைஞர்களுக்கும் உள்ளூராட்சி சபை மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மற்றும் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிடமுள்ள மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளுக்கான அமைப்பாளர்கள் உடனடியாக நியமிக்கப்படுவதோடு, இளம் தலைவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

