152 நாடுகளை சேர்ந்த 3500 போட்டியாளர்கள் கலந்து கொண்ட IFMA உலக யூத் சாம்பியன்ஷிப் இல் இலங்கை அணிக்கு அபார வெற்றி… பயிற்றுவிப்பாளர் M.H.M பாஹித் இற்கு வாழ்த்துக்கள்

IFMA உலக யூத் சாம்பியன்ஷிப் – இலங்கை அணிக்கு அபார வெற்றி. 19 பதக்கங்களை வென்ற IMA கழக மாணவர்கள்.
கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை. தாய்லாந்து பேங்க் காக் நகரில். IFMA Muay Thai Youth World championship (இப்மா உலக யூத் சாம்பியன்ஷிப்.) மிக விமரிசையாக நடைபெற்றது.
இப்போட்டியில் மடவளையை சேர்ந்த ISHAK FAHID மாணவர் மாய் முஅய் MAI MUAY போட்டி பிரிவில் விஷேட திறமைகளை வெளிக்காட்டி இலங்கைக்கு வெண்கலப்பதக்கமொன்றை வென்று பெருமை சேர்த்தார், இவர் மடவளை Hill Country International சர்வதேச பாடசாலையில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது, அத்துடன் இம்முறை இலங்கை அணி சார்பாக தேசிய பயிற்றுவிப்பாளராக கலந்து கொண்ட மாஸ்டர் M.H.M FAHID அவர்களின் புதல்வரும் ஆவர்.
இப்போட்டியில் 152 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி.3500.போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இலங்கை சார்பாக 28 போட்டியாளர்கள் மற்றும் 12.அதிகாரிகள் அணியில் இடம் பெற்றனர்.
இலங்கை அணி போட்டியாளர்களை போட்டியில் மிக சிறப்பாக போட்டியிட்டு. இலங்கைக்காக பல பதக்கங்களை வென்று எடுத்தனர். இலங்கையின் தலைசிறந்த முன்னணி.தற்காப்பு கலை கழகமான IMA SRI LANKA, வீர வீராங்கனைகள் 13 பேர் இப்போட்டியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இவர்கள்.தமது. திறமைகளை வெளிக்காட்டி கீழ்வருமாறு பதக்கங்களை வென்று எடுத்தனர்.
IMA SRI LANKA கழக மாணவர்கள் அனைவரையும் மிக சிறப்பான முறையில் கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளரும். தலைவருமான M.H.M FAHID அவர்கள் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
*Sri Lanka’s Fahid Ishak Secures Bronze at IFMA Muaythai World Championship 2024*
*Bangkok, Thailand* – Sri Lanka’s rising talent, *Fahid Ishak*, made the country proud by winning a bronze medal at the *IFMA Muaythai World Championship 2024*, held from *12th to 19th September* in Bangkok. The prestigious event saw the participation of *3,500 athletes from 150 countries*, making it one of the most highly competitive championships in the Muaythai category.
Fahid Ishak, a *9th grade student* at *Hill Country International School, Madawala*, competed in the Mai Muay category and showcased exceptional skills, determination, and resilience throughout the tournament. His victory not only brought honor to his school but also to Sri Lanka, as he secured a podium finish in one of the sport’s most challenging events.
Fahid Ishak is the son of *Master M.H.M Fahid*, who served as the National Coach for the Sri Lankan team during the tour. Under his father’s guidance, *Fahid Ishak* has continued to excel, demonstrating both discipline and dedication in his Muaythai training.
The success of *Fahid Ishak* at this international platform is a testament to his hard work and the growing prominence of Muaythai in Sri Lanka. His achievements inspire young athletes across the nation, paving the way for future champions .








