News
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய 90 பேருக்கு எதிராக முறைப்பாடு ..
ஜனாதிபதி செயலத்தின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய 90 பேருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷார இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
இந்த வாகன பாவனைகளினால் ஏற்பட்ட நட்டத்தை அவர்களிடம் அறவிடுமாறு அவர் முறைப்பாடு செய்துள்ள்ளார்.