News

வெற்றி பெற்றவர்களுக்கு போலவே தோற்றவர்களுக்கும் நாட்டின் மீது பொறுப்பு உள்ளது…
நாம் அனைவரும் கைகோர்த்தே  இந்நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் ; சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் மட்டுமே தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்றாகும். நாடு எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் பணி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



நாடு தற்போது பன்முக பல சவால்களை எதிர்கொள்கிறது. சிறுவர் தினம் முதியோர் தினம் குறித்து பேசும் போது கூட இலட்சக்க கணக்கான பிள்ளைகள் பட்டினியால் வாடுகின்றனர். அவர்கள் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளனர். வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்களும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



மஹரகம தேர்தல் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று (01) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.



நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளன. நாட்டிற்கு தீர்வுகளை வழங்கும் பொறுப்பு வெற்றி பெற்ற அணியினருக்கும் போலவே தோற்கடிக்கப்பட்ட அணியிருக்கும் காணப்படுகின்றன. இந்த பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் தயாராக வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் குழுவாக அவர்கள் மாற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.



🟩 வெற்றி பெற்றவர்களுக்கும் போலவே தோற்றவர்களுக்கும் நாட்டின் மீது பொறுப்பு உள்ளது.



வெற்றி பெற்றவர்களிடம் மட்டும் பொறுப்புகளை ஒப்படைப்பது வங்குரோத்தான நாட்டுக்கு ஏற்புடையதல்ல. இதற்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சி முன்னோடியான வேலைத்திட்டத்தை கொண்டிருக்கிறது. அதிலிருந்து பின்வாங்க முடியாது. இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.



🟩 பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி



பிரச்சினைகளை தீர்க்கும் சக்தியாகவே ஐக்கிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த வெற்றி பொது வெற்றியாக அமைய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்குத் தேவையான உற்பத்தித் தொழில்களை உருவாக்க வேண்டும். உற்பத்தித் தொழில் முறையை சீர்படுத்த வேண்டும். வாழ்வாதாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். புதிய தொழில் முனைவோர் உருவாக வேண்டும். ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும்.



🟩விமர்சனத்தைப் போலவே வேலையும் செய்ய வேண்டும்.



மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய கடினமான சூழ்நிலையில், பழமைவாத முறைகளுக்குச் செல்லாமல், புதிய வழிமுறைகளை கண்டறியும் திட்டத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. விமர்சனங்களோடு மட்டும் மட்டுப்பட்டுவிடக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.



செய்வதாகச் சொல்லப்பட்ட காரியங்களைச் செய்ய முடியாதபோது, அவற்றைக் குறைகூறாமல் முற்போக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கல்வியை நடைமுறையில் யதார்த்தமான ஒன்றாக மாற்ற வேண்டும். ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க வேண்டும். தற்போது கல்வித்துறையில் பல பிரச்சினைகள் உள்ளதால், பரீட்சைக்கு முன்பே வினாத் தாள்கள் கூட வெளிவருவதால். ஒரு நாடு என்ற வகையில் அதிக போட்டித்தன்மையுடன் உழைக்க வேண்டியுள்ளதால் சிறந்த குடிமக்களை உருவாக்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சிறுவர் சிறுமியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வியில் மாற்றுத் தெரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button