News

பிரான்சிலிருந்து வந்துள்ள நபர் ஒருவர் பொதுமக்களின் தனியார் காணிகளை கபளீகரம் செய்ய முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு

திருகோணமலை  நிலாவளி வீதியில் ஆறாம் கட்ட பிரதேசத்தில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளின் பாதைகள் தனியார் ஒருவரால்  தடைப்படுத்தப்பட்டு  அது தொடர்பான  முப்பது குடும்பங்களின் மேல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில்   (01)  நேற்று ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினர்.  
குறித்த நடவடிக்கைகள் முன்னால் கிழக்கு ஆளுனரின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்டதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் உறுதி காணிகள் தான் வசித்து வந்த நிலையில் பிரான்சிலிருந்து வருகை தந்த ஒரு நபர் தன்னுடைய காணி என்று  கூறிய நிலையில் இவ்வாறான செயற்பாடு ஒன்று இடம்பெற்று தற்போது வழக்கு நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஒரு கிறிஸ்தவ மதஸ்தலம் ஒன்று பாதை மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளது அதற்கு வழி வரும் மக்கள் அநேகர் பிரச்சினை எதிர்கொள்வதாக குறித்து கிறிஸ்தவ மத பாரதியார் பாஸ்டர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இங்கு கிறிஸ்தவ தேவாலயம்,பாலர் பாடசாலை செல்லும் பாதைகள் தடைப்படுவதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பகுவதாகவும் தெரிவிக்கின்றனர். 1982ம் ஆண்டில் காணியை கொள்வனவு செய்து சட்ட ரீதியான குடியேற்றங்களை அமைத்து வந்தோம் தற்போது ஒருவர் தன்னுடைய காணி என அப்பட்டமாக உரிமை கோருகிறார் இதன் மூலம் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம் என அப் பிரதேச மக்களை கவலை வெளியிடூகின்றனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவும் ஒரு சில காடையர்களை கொண்டு தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விட்டனர்  எனவே எங்களது பூர்வீக குடியிருப்பு காணிகளை பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button